Saturday, November 13, 2010

Manifesto of Communist Party (Tamil)

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

"உலகத் தொழிலாளர்களே ஒன்றினையுங்கள்"
"இதுநாள் வரையிலுமான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது வரலாறே ஆகும்"
--கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

இத்துடன் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்கிற முக்கியமான புத்தகத்தை இணைத்துள்ளேன்.
http://www.4shared.com/document/UCTR6Kui/ManifestoOfCommunistParty.html
இந்த புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு 1848. இந்த புத்தகத்தை தயவுசெய்து நேரத்தை ஒதுக்கி முழுமையாக படிக்கவேண்டும் என விரும்புகிறேன். படித்த பின்னர் அதைப்பற்றிய கலந்துரையாடலை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
இந்த அறிக்கையில் குறிப்பிடும் பொதுக்கொட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும் போல் இன்றும் சரியானவையே.

உலக முதலாளித்துவத்தின் மூலதனப் பரவலையும் அதன் பயங்கரவாத தன்மைமையையும் அதற்கெதிராக தொழிலாளர்களின் நிலையும் தொழிலாளர்களின் பலத்தையும் சரியான முறையில் அன்றே மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் ஆகியோர்கள் நிறுபித்துள்ளார்கள்.

கம்யூனிசப் போர்வையின் கீழ் முதலாளித்துவ அரசுகளை நடத்துகிற சீனா மற்றும் கியூபா போன்ற நாடுகளின் உண்மையான தோற்றங்களை தொழிலாளர்கள் அடையாளம் கான்பதுடன் அதற்கெதிரான தொழிலாளர்களின் போராட்டங்கள் எழுச்சி பெற்று வருவதையும் பார்க்ககூடியதாக உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் படுமோசமாக அரசாங்கங்கள் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரங்களை நசுக்கி வருவதை அன்றாடம் செய்திகளில் பார்க்கிறோம். லட்சக்கணக்கான மக்கள் தெருவுக்கு வந்து போராட்டங்களை நடத்தியதை தொலைக்காட்சி மற்றும் செய்திக்தாள்களில் அன்மைய வாரங்களில் பார்த்திருப்போம். இந்தியாவில் நடந்துவருகிற பெரும்பாலான போராட்டங்களும் அதில் அதிகரித்து வருகிற தொழிலாளர்களின் எண்ணிக்கையும் பத்திரிகைகளும், இன்டர்நெட் தளங்களும் பிரசுரித்துக்கொண்டு வருகின்றன. திருப்பூர் போன்ற தொழில்துறை நகரம் இன்று தொழிலாளர்கள் தற்கொலைகள் செய்துகொள்ளும் நகரமாக மாறிவருகின்றது அதைப்பற்றிய செய்திகளையும் படித்திருப்பீர்கள்.

குறிப்பாக மே 2008 அமெரிக்காவில் ஏற்பட்ட வங்கிகளின் சரிவுகளுக்குப் பிறகு உலக முதலாளித்துவ அமைப்பு ஒரு இக்கட்டான நெருக்கடிக்கு போயிருக்கிறது. G20 மாநாட்டிலும் அதன் எதிரொலி மிக அதிகமாக இருந்தன.

போராட்டங்களை திசைதிருப்பி முதலாளித்துவ அரசுகளைக் காப்பாற்றி வருவதில் போலி கம்யூனிச அமைப்புகள் மற்றும் முதலாளித்து தொழிற்சங்கங்கள் பெரும்பங்காற்றி வருகின்றன.

ஆக இன்று தொழிலாளர்களை நவீன அடிமைகளாக முதாலித்துவ அமைப்பு மாற்றிவருகின்றன ஏன்?

முதலாளித்துவத்தின் தோற்றமும் அது ஏற்படுத்தியுள்ள புரட்சிகரமான பங்களிப்பும் என்ன?

பாட்டாளிகள் என்கிற தொழிலாளர்களின் உருவாக்கமும் தொழிலாளர் வர்க்கத்தின் பங்களிப்பும் என்ன?

இந்த முதலாளித்துவ அமைப்பால் மக்களின் வாழ்க்கையை சரியான முறையில் பேன முடியாது அது ஏன்?

வரலாற்றில் தொழிலாளர் வர்க்த்தின் பணி என்ன?

இந்த கேள்விகளை புரிந்து கொள்வதற்கு இந்த புத்தகம் பெரும் பங்களிப்பை செய்கின்றது.

இலங்கை, பாலஸ்தினம், லெபனான் போன்ற நாடுகளில் குட்டி முதலாளித்துவ வர்க்கங்களால் உருவாக்கப்பட்ட இயக்கங்கள் பல்லாயிரக்கனக்கான மக்களை கொன்றுவிட்டு கானாமல் போய்விட்டன. இந்த மாதிரியான பல்வேறு அமைப்புகள் உலகமுழுவதும் இருக்கின்றன. அவைகள் தொழிலாளர்களின் போராட்டங்களை காட்டிக்கொடுப்பதினூடாக முதாலாளித்துவ அமைப்புக்கு சேவகம் செய்வதினூடாக கதையை முடித்துகொள்கின்றன அல்லது ஏகாதிபத்திய அரசால் அழிக்கபட்டு விடுவதை வரலாறுகள் கொடுத்துள்ளன.

எனவே தொழிலாளர்களுக்கு இருக்கிற முதன்மையான வர்க்க சிந்தனையை புரிந்துகொள்வதினூடாகவும், தொழிலாளர்களின் சுயாதினமான கட்சியைக் கட்டுவதினூடாக மட்டுமே மனிதகுல விடுதயை தீர்மானிக்க முடியும். தவிர்க்கும் பட்சத்தில் மூன்றாம் உலக யுத்தத்தை சந்திக்கவும் ஒரு காட்டுமிரான்டிக் காலத்திற்கு எதிர்காலத்தை விட்டுசெல்லவும் வழிவகுக்கும்.

"உழைப்பு சக்தி"யை விற்று இந்த முதலாளித்துவ அமைப்பில் வாழ்கிறவன் எல்லோரும் தொழிலாளி வர்க்கத்தை சேர்ந்தவர்களே.

No comments:

Post a Comment